அம்மன் கோயில் பூக்குழி திருவிழா

 

திருவாடானை, மே 3: திருவாடானை ஓரியூர் விலக்கு சாலையில் பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்.24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. விழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் பூஜையும் நடைபெற்றது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று பூக்குழி திருவிழா நடைபெற்றது. கோயில் முன்பாக நடைபெற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கினர்.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து