அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

பள்ளிபாளையம், மார்ச் 28: தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடத்திய படைவீடு பேரூராட்சி ஊழியாளர்கள் கிராம மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளார்களும், வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, படைவீடு பேரூராட்சியில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகம் முன் இருந்து புறப்பட்ட பேரணியை, தேர்தல் அலுவலர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார். சிமெண்ட் ஆலை, கணக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேரணி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. வழியோரங்களில் உள்ள கிராம மக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில், பேரூராட்சி ஊழியாளர்கள் பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி