அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி

ராமநாதபுரம், மார்ச் 19: ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்துறையின் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு கோலப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024ஐ யொட்டி, 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்திடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் மகளிர் குழுக்கள் மூலம் கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை என்பதை உறுதி செய்திடும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  இதேபோல் பல்வேறு வகையில் மக்கள் எளிதாக அறிந்து தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.

வாக்காளர்கள் வருகின்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று 100% வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென தெரிவித்தார். தொடர்ந்து ‘என் வாக்கு என் உரிமை” என்ற வரிகளை உணர்த்தும் வகையில் மகளிர் குழு அணி வகுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சிவானந்தம், மகளிர் திட்ட அலுவலர் சையது சுலைமான், உதவி திட்ட அலுவலர்கள் அரவிந்த், அழகப்பன்,தங்கபாண்டியன், ராஜா முகமது, வட்டார இயக்க மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி