அனுமதி இல்லாத கட்டிடத்தில் காஸ் குடோன் அமைப்பதை தடுக்கக்கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அனுமதி இல்லாத கட்டிடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்.பி.ஜி. எரிவாயு கிடங்கு செயல்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசி்க தர்மபுரி கிழக்கு பகுதி செயலாளரான கதிரவன், அனுமதி இல்லாத கட்டிடத்தில் காஸ் குடோன் உள்ளதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சட்டவிரோத எரிவாயு கிடங்கின் கட்டுமானத்தை தடுத்து நிறுத்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்