அடைக்கம்பட்டி ஊராட்சியில் 100 சதவீதம் வாக்களிக்க கோலம் வரைந்து விழிப்புணர்வு

 

துவரங்குறிச்சி, மார்ச் 29: மருங்காபுரி ஒன்றியத்தில் 100% வாக்களிக்க வேண்டி அடைக்கம்பட்டி ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் அடைக்கம்பட்டியில் 100% வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சார்பாக நேற்று மருங்காபுரி வட்டார இயக்க மேலாளர் சிவக்குமார் ,வட்டார ஒருங்கிணைப்பாளரகள் ,சமுதாய வளப் பயிற்றுனர்கள், கிராம நிர்வாக அலுவலர் ,ஊராட்சி செயலாளர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி,விழிப்புணர்வு கோலம், விழிப்புணர்வு கும்மி அடித்தல் போன்ற நிகழ்வுகள் மூலமும், உறுதிமொழி எடுத்தும் பொது மக்களிடம் 100%வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related posts

புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் அனைத்திலும் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது: அதிகாரிகள் தகவல்

ஷேர் மார்க்கெட்டில் இரட்டிப்பு லாபம் என போலீஸ்காரரிடம் பணம் பறிப்பு: மோசடி நபர்களுக்கு வலை

செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற 3 நாட்களில் 2300 பேர் விண்ணப்பம்: மாநகராட்சி தகவல்