விஜய்வசந்த் எம்.பி. ஏற்பாட்டில் குளச்சலில் புல், புதர்கள் அகற்றம்

 

குளச்சல், ஜூன் 29: குளச்சல் துறைமுக தெரு புனித அந்தோணியார் சிற்றாலயம் அருகில் மற்றும் துறைமுக பகுதியில் புல் பூண்டு அடர்ந்து வளர்ந்து பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது. ஆகவே புல், பூண்டுகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் விஜய்வசந்த் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவரது சொந்த செலவில் ஜே.சி.பி. வாகனத்தை அமர்த்தி புல், பூண்டுகள் அகற்றும் பணி தொடங்கியது. இதில் மாவட்ட மீனவர் காங். தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின், நகர தலைவர் சந்திரசேகர், நகர மீனவர் காங். தலைவர் அருள், நகராட்சி கவுன்சிலர் ஜாண் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி