துருக்கியில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து: 29 பேர் தீயில் சிக்கி பரிதாப பலி..!!

துருக்கியில், கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர். இஸ்தான்புலில், 16 மாடி கட்டடம் ஒன்றின் தரை தளத்துக்கு கீழ் அமைந்துள்ள கேளிக்கை விடுதியில், உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்தன. அப்போது, வெல்டிங் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் டாங்க் வெடித்து அங்கு தீப்பற்றியதாக கூறப்படுகிறது. கேளிக்கை விடுதியின் நுழைவாயில் குறுகலாக இருந்த நிலையில், தீ வேகமாகப் பரவியதால் 29 போ தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

Related posts

மெக்சிகோவில் கடும் வறட்சி…ஆயிரக்கணக்கானமீன்கள், உயிரினங்கள் உயிரிழக்கும் அவலம்..!!

தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினை.. மக்கள் தவிப்பு

காஷ்மீரில் பக்தர்களுடன் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : 10 பேர் உயிரிழப்பு; 33 பேர் காயம்