திருக்கோவிலூர் துணிக்கடையில் உடைமாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரம்: 3 பேர் அதிரடி கைது

 

திருக்கோவிலூர், ஜூன் 29: திருக்கோவிலூர் மேல வீதியில் பிரபல துணிக்கடை உள்ளது. இந்த துணிக்கடை கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு துவங்கப்பட்டு விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரகண்டநல்லூரை சேர்ந்த இரண்டு பெண்கள் துணி எடுத்து அளவு சரி பார்ப்பதற்காக உடை மாற்றும் அறையில் சென்று பார்த்தனர். அப்போது ரூமின் மேலே உள்ள ஏசி வெண்டிலே கீபேட் கேமரா போன் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அங்கிருந்து வெளியே வந்து கூச்சலிடவே கடை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். தகவல் அறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை செய்ததில் அங்கு கீ பேட் கேமரா போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் விசாரணையில் அங்கு கடையில் பணிபுரியும் கண்டாச்சிபுரம் தாலுகா நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் மகன் விக்னேஷ்(25) என்பவர் கீபேட் கேமரா போன் வைத்திருந்ததும் அதற்கு உடந்தையாக இருந்த அதே கடையில் பணிபுரியும் அவரது தங்கை உதயா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் வெள்ளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராசு மகன் ஏழுமலை என்பவரையும் கைது செய்தனர். இச்சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்