தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தீவிர வாக்கு சேகரிப்பு: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக ேவட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அடையாறு மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென் சென்னையில் வெள்ள பாதிப்பின்போது, மக்களோடு மக்களாக இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளேன். இதற்கு சான்றாக ஒன்றிய அரசு அனுப்பிய குழுவினர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர். தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி உள்ளேன். திமுக அரசின் சாதனைகளை முன்வைத்தும், நிறைவேறியுள்ள திட்டங்களை முன்வைத்தும் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சைதாப்பேட்டை பஜார் சாலையில் நேற்று காலை தேர்தல் பணிமனையை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ வேலு ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார் உடனிருந்தனர். தொடர்ந்து, நேற்று மாலை சைதாப்பேட்டை கிழக்கு பகுதிகளில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, ஆலந்தூர் ரோடு, நெருப்பு மேடு, செட்டி தோட்டம், ஜோதியம்மாள் நகர், விஜிபி சாலை, பார்சன் காம்ப்ளக்ஸ், விநாயகபுரம் மற்றும் சைதாப்பேட்டை மேற்கு பகுதிகளான ரத்தினம் தோட்டம், வ.உ.சி. தெரு, கருணாகரன் தெரு, பாரதியார் தெரு, துரைசாமி தோட்டம், விலாமர குடிசை, சொத்தவால்சாவடி தெரு, மசூதி சந்து, மசூதி பள்ளம், மசூதி தெரு, செட்டி தெரு, வி.வி.கோயில் தெரு, புஜங்கர் தெரு, சாமியார் தோட்டம், காவலர் குடியிருப்பு, பிராமின் லேன், பிராமின் தெரு மற்றும் முடிவு பகுதியாக ஆலந்தூர் சுங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும், கட்சியின் உறுப்பினர்களும் வாக்கு சேகரித்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை