சிம்லா முத்துச்சோழன் அதிமுகவில் இணைந்தார்

சென்னை: திமுக முன்னாள் அமைச்சரும், துணை பொதுச்செயலாளருமான சற்குண பாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். இதன்மூலம் அவர் தமிழகம் முழுவதும் பிரபலமானார். அப்போது நடந்த தேர்தலில் ஜெயலலிதாவிட வெறும் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னையில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த சிம்லா முத்துச்சோழன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் (6ம் தேதி) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் இணைந்தார்.

 

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்