சாலை விபத்தில் இருவர் படுகாயம்

அண்ணாநகர்: அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் தரணிகுமார் (45). இவர், நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தாறுமாறாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில், தரணிகுமார் காயங்களுடன் உயிர் தப்பினார். பைக்கை ஓட்டி வந்த வாலிபருக்கு தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தகவலறிந்த அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ‘‘குடிபோதையில் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (27) என்பதும் பைக் பின்னால் அமர்ந்திருந்தவர் நண்பர் பிரதீப் (22) என்பதும் தெரியவந்தது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்