புழல் மத்திய சிறைச்சாலை எதிரே பழுதான குடிநீர் பைப்லைன் சீரமைப்பு

புழல்: புழல் மத்திய சிறைச்சாலை எதிரே பழுதான நிலையில் இருந்த குடிநீர் பைப்லைன் சீரமைக்கப்பட்டது. புழல் மத்திய சிறைச்சாலை எதிரே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலை மற்றும் காந்தி பிரதான சாலையை இணைக்கும் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்லைனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறியது. அந்த தண்ணீர் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் தேங்கியது. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குடிநீர் பைப்லைன் பழுது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இந்நிலையில், தினகரன் செய்தி எதிரொலியாக புழல், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் நேற்று பைப்லைன் உடைந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், குடிநீர் வீணாவதைத் தடுக்க உடனடியாக பைப்லைனை சீரமைத்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்