புழுதிவாக்கம் ராமசாமி தெருவில் இ-சேவை மையம் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம் 186வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் ராமசாமி தெருவில் இயங்கும் சமூக அறக்கட்டளை கட்டிடத்தில் இ-சேவை மைய திறப்பு விழா நேற்று நடந்தது. அறக்கட்டளையின் தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். மண்டலக்குழு தலைவர் எஸ்வி.ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர் ஜெ.கே.மணிகண்டன், மண்டல உதவி ஆணையர் முருகள், செயற்பொறியாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அறங்காவலர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.

சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் கலந்துகொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்து முதற்கட்டமாக 10 பேருக்கு வருவாய் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றை வழங்கினார். இதனையடுத்து அங்குள்ள ரேஷன் கடையை பார்வையிட்ட அரவிந்த ரமேஷ் எம்எல்ஏ, அரசு நிர்ணயித்த நேரத்தில் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என ரேஷன் கடை ஊழியருக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் வளர்மதி, உதவி செயற்பொறியாளர் மோகன வடிவேல், அறக்கட்டளை மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் நந்தகுமார், முருகரசன், வேலாயுதம், ரமணன், ஜவகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்