மத்திய சென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ரூ.1.29 கோடி சொத்து


சென்னை: மத்திய சென்னை தேமுதிக சார்பில் போட்டியிடும் பார்த்தசாரதி 1 கோடியே 29 லட்சத்துக்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. களத்தில் நேருக்குநேர் மோதும் பிரதான கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். இந்நிலையில், உறுதிமொழி பத்திரத்துடன் அவர்கள் கணக்கு காட்டியிருக்கும் சொத்து மதிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் மத்திய சென்னை தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பார்த்தசாரதி சொத்து விவரம் வெளியாகி உள்ளது. அதில் தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.43,18,952 மதிப்பில் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் ரூ.18,81,429 மதிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னை 2 பேர் சார்ந்து இருப்பதாகவும் அதில் ஒருவர் பெயரில் ரூ.15,31,994 மதிப்பில் இருப்பதாகவும் மற்றொருவர் பெயரில் ரூ.14,58,000 மதிப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அசையா சொத்துகள் தன் பெயரில் ரூ.40,90,000 மதிப்பிலும், தனது மனைவி பெயரில் ரூ.26,70,000 மதிப்பிலும் இருப்பதாக பட்டியலி ட்டிருக்கிறார். ஆக மொத்தம் கிட்டத்தட்ட கணவன், மனைவி இருவரது பெயரிலும் அசையும், அசையா சொத்துகள் மொத்தமாக ரூ.1 கோடியே 29 லட்சத்துக்கு இருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார். மேலும் கையில் ரூ.3 லட்சம் வைத்து இருப்பதாகவும் பார்த்தசாரதி தெரிவித்து இருக்கிறார்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு