நடக்கவே முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இளம்தொழிலதிபர் பூரண குணம்: மியாட் மறுவாழ்வு மையம் சாதனை

சென்னை: மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மியாட் மறுவாழ்வு சிகிச்சை மையத்தினை திறந்து வைத்தார். இந்த மறுவாழ்வு மையத்தில நரம்பியல், முதுகெலும்பு, அறுவை சிகிச்சை நிபுணர்கள், பிசியோதெரப்பிஸ்ட்கள், நியூரோ – மாடுலேஷன் மற்றும் உடல் மருத்துவம், சுவாச சிகிச்சை நிபுணர், இன்டென்சிவிஸ்ட், மற்றும் உளவியலாளர் ஆகியோர் உள்ளடக்கிய குழுவினர் தலை முதல் கால் வரை மறுவாழ்வு சிகிச்சை அளிக்கும் பிரத்யேக சிகிச்சையை அளித்து வருகின்றனர். இந்த, மையத்தின் மூலம் இதுவரை 1,000 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் கோவையை சேர்ந்த பிரணேஷ் விஷ்ணு (27) என்ற இளம் தொழில் அதிபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு மற்றும் நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. அதற்கான சிகிச்சை பெற்றும் அவருக்கு இடுப்பிற்கு கீழ் எந்த அசைவும் இல்லாத பக்கவாத நிலைக்கு தள்ளப்பட்டார். பல்வேறு மருத்துவமனைகளை தொடர்பு கொண்ட இவரது பெற்றோர் முடியாத நிலையில மியாட் மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிசசை மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு வந்தனர். அவரை பரிசோதித்த மியாட் மருத்துவர்கள், 12 வார சிகிச்சை மற்றும் பிரத்தியேக உடற்பயிற்சிகள் அளித்து பிரனேஷ் விஷ்ணுவை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து மியாட் மருத்துவமனையில் மேலாண் இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் கூறுகையில், ‘‘நடக்கவே முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்ட பிரணேஷ் விஷ்ணு நம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்து இங்கு சிகிச்சைக்கு வந்தார். இடுப்புக்கு கீழ் பக்கவாத நோயாளிக்கு மறுவாழ்வு அளிப்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருப்பினும், மறுவாழ்வு மையத்தில், 12 வாரங்கள் அவரை தங்கவைத்து படிப்படியாக சிகிச்சை மற்றும் உடற் பயிற்சி அளிக்கபட்டது. அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவர் நடக்கிறார், விளையாடுகிறார். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இதுபோன்று விபத்தில் சிக்கியவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரை காப்பாற்றி விடுகின்றனர். ஆனால், அவர்களில் பலர் இயல்பு நிலைக்கு திரும்புவதில்லை. இதைப்பற்றி அவர்கள் யோசிப்பதும் இல்லை.காரணம் மறுவாழ்வு சிகிச்சை மையம் எல்லாம் சும்மா என்கிறார்கள். இதுகுறித்த விழிப்பணர்வு இல்லை ஆனால், இது மிக முக்கியம் என்பது பிரணேஷ் விஷ்ணு புரிந்துகொண்டுள்ளார்,’’ என்றார்

மறுவாழ்வு மையத்தில் மூலம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிரணேஷ் விஷ்ணு கூறும்போது ‘‘என்னால் நடக்க முடியுமா என எண்ணினேன் ஆனால் நடக்கிறேன் மருத்துவர்கள் பயிற்சிகளால் படிபடியாக நடக்க ஆரம்பித்தேன். முதலில் உபகரணங்கள் உதவியுடன் நடந்தேன். இப்போது தனியாக நடக்கிறேன். 95% குணம் அடைந்துள்ளேன் மருத்துவர்களுக்கு நன்றி,’’ என்றார்.

Related posts

கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்

துறையூர் அருகே ஆட்டுக்கு தழை பறித்த பெண் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டத்தில் மாஜி படைவீரர்கள் குழந்தைகளுக்கு சார்ந்தோர் சான்று பெற அழைப்பு