காகிதமில்லா மாதாந்திர ஆவின் பால் அட்டை

சென்னை: காகிதமில்லா மாதாந்திர பால் அட்டையை ஆவின் பால் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எளிய நடைமுறையில் காகிதமில்லா பால் அட்டையை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்து தரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் மூலமாக பதிவு செய்யும் பொழுது குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

அதை சம்பந்தப்பட்ட ஆவின் டெப்போக்களில் காண்பித்து அவர்களுக்கு உண்டான பால் வகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி மூலமாகவும் மாதாந்திர பால் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு