ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு எதிரான மனு தள்ளுபடி

 

மதுரை, மே 18: மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூரைச் சேர்ந்த பார்த்தசாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கான கிழக்கு பகுதியில் இரண்டு விவசாய களமும், மேற்கு பகுதியில் ஒரு களமும் உள்ளது. இதில், கிழக்கு பகுதியில் பள்ளியின் வடபகுதியில் ஏற்கனவே கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் தற்போது ஊராட்சி அலுவலகம் கட்டப்படவுள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட கழிப்பறையும் பயன்பாட்டில் இல்லை.

எனவே, இதை அகற்றி விட்டு ஊராட்சி அலுவலகம் கட்டாமல் மொத்த பரப்பளவையும் விவசாய களமாக மாற்றித்தரவும், ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் அமைக்கவும், களத்தை அகற்றி விட்டு ஊராட்சி அலுவலகம் அமைக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட இடத்தில் தான் ஊராட்சி அலுவலகம் கட்டப்படுகிறது.எனவே, இதில் தலையிட முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

 

Related posts

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

பொன்மலை ரயில்வே பணிமனையில் வேலைநேரம் காலை 7 மணிக்கு மாற்றம்

பெண்களை அவதூறாக பேசிய பிரதமர் மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்