கஞ்சா சாக்லெட் விற்ற ஒடிசா வாலிபர் கைது: 2.5 கிலோ பறிமுதல்

ஆலந்தூர்: ஒடிசாவில் இருந்து ஆதம்பாக்கத்திற்கு கஞ்சா சாக்லெட் கடத்தி வந்து விற்பனை செய்த ஒடிசா வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 2.5 கிலோ எடை கொண்ட 448 கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். ஆதம்பாக்கம், பாலாஜி நகர் பகுதியில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக பரங்கிமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் ரெத்தினகுமார் தலைமையிலான போலீசார், ஆதம்பாக்கம் பாலாஜிநகர் பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி கைப்பையுடன் நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரசனந்த பாட்ரா (35) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கஞ்சா சாக்லெட்டை கடத்தி வந்து, ஆதம்பாக்கம் பகுதியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ 450 கிராம் எடையுள்ள 448 போதை சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ரசனந்த பாட்ரா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்