நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம்: 40 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரத்தில் 50,000 மின்விளக்குகள் ஒளிரூட்டப்பட்டது..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின. இதன் ஒருபகுதியாக நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. 40 அடி உயரம் கொண்ட அந்த மரத்தில் வண்ண வண்ண மின் விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. 91வது ஆண்டாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 50 ஆயிரம் மின் விளக்குகள் மரத்தை சுற்றி தொங்கவிடப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்துகொண்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

Related posts

அமெரிக்காவில் பிரபலமாகி வரும் பன்றிக்குட்டி யோகா..!!

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2,000 பேர்!!

டெல்லி மெட்ரோ ரயிலில் ராகுல் காந்தி பயணத்தின் போது பொதுமக்கள் கலந்துரையாடல்..!!