நெல்லை மாவட்டத்தில் 103 சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை: நெல்லை மாவட்டத்தில் 103 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5000 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த கன மழையினால் தண்ணீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் நோய் தடுப்பு சிகிச்சை வழங்குவதற்காக இன்று 103 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 5000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 108 நபர்களுக்கு காய்ச்சலும், 158 நபர்களுக்கு சளி, இருமல் கண்டறியப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்