நாசா போட்டிக்கு 5 மாணவர் தேர்வு

 

கோவை ஏப்.25: கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சந்திரமாரி சர்வதேச பள்ளியில் பயிலும் 5 மாணவ மாணவிகள் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்தும் அறிவியல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விண்வெளி ஆராய்ச்சி போட்டிக்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு மாணவ மாணவிகள் தயார் செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பொது அறிவு, சமூக மேம்பாடு தொடர்பான தகவல்கள் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர் மூலம் கற்றுத் தரப்பட்டு மாணவ, மாணவிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

அறிவியல், ஆராய்ச்சிகள் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அடித்தளமாக இருக்கிறது. இதற்கான சிறப்பு பயிற்சிகள் மூலமாக மாணவ மாணவிகள் எதிர்கால போட்டி தேர்வுக்கு தயாராக முடியும். பாடம் மட்டுமின்றி அனைத்து தனித் திறன் போட்டியில் சாதிக்கும் வகையிலும் சிறப்பு பயிற்சிகள் பெற வேண்டும் என கோவை சரக போலீஸ் டிஐஜி விஜயகுமார் தெரிவித்தார். மேலும் நாசா போட்டிக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்