மீஞ்சூரில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

பொன்னேரி: மீஞ்சூரில் கொதிகலன் கசிவை சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி கடந்த 3ம் தேதி பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு சரிசெய்யபட்ட நிலையில் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு