மருந்தாகும் அஞ்சறைப் பெட்டி

நன்றி குங்குமம் தோழி

நமது சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்து பெட்டி போன்றது. அதிலிருக்கும் மசாலாப் பொருட்கள், சில உணவு வகைகளுக்கு ருசி, மணம் தருவதோடு மருந்தாகவும் உடலை இளைக்கச் செய்ய பயன்படுகிறது.

  1. இஞ்சி: இது உடல் சூட்டை அதிகமாக்கி உடலின் கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
  2. பூண்டு: இது இதய நோய் தடுப்பிற்கு ஏற்றது. சிறுநீரை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கும், உடலை இளைக்க செய்வதற்கும் இது வழி செய்கிறது.
  3. பெருஞ்சீரகம்: இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. பலர் இதை தேயிலையோடு சேர்த்தோ தனியாகவோ, டீ செய்து பருகி, பசியை குறைத்து உடல் இளைக்க உபயோகிக்கிறார்கள்.
  4. மிளகாய் பொடி: மிளகில் உள்ள காப்ஸேஸின் என்னும் பொருள் மிளகாயிலும் இருப்பதால் உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தி வியர்வை அதிகமாக வர காரணமாகி நமது உடல் சீக்கிரம் கலோரிகளை எரிக்க உதவுகிறது. உடல் எடையும் குறையும்.
  5. சீலரி விதை: இது கடுகு போல இருக்கும். சிறுநீரை அதிகமாக வெளியேற்றி உடல் எடையை சீராக்குகிறது. சர்க்கரை வியாதிக் காரர்களின் அசட்டு பசி வராமல் தடுக்கிறது.
  6. பார்லி: இது கொத்தமல்லியை போல் தோற்றம் உள்ள ஒரு கீரை வகை. ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலுக்கு சக்தியைக் கொடுத்து, உடலில் அதிகப்படி நீர் தங்காமல் வெளியேற்றி எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

தொகுப்பு : டி.சாந்தி, கன்னியாகுமரி.

Related posts

தியாகிகளா அம்மாக்கள்!

கோடையில் உடல் வறட்சியை தடுக்க…

நித்யா அக்காவுடன் ஆயிரம் மேடைகளுக்கு மேல் பண்ணிட்டேன்!