மணிப்பூர் பிரச்னையை கண்டித்து மமக செல்போனில் லைட் அடித்து நூதன போராட்டம்

 

நாகப்பட்டினம்,ஜூலை26: மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் அத்துமீறல்களை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகப்பட்டினம் ரயில்வே நிலையம் முன்பு செல்போனில் லைட் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் இப்ராகிம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் தாதாசரீப் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் முகம்மதுரபீக் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மணிப்பூரில் பெண்கள் மீது நடந்த பாலியல் குற்றத்திற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசை கண்டிப்பது. பாலியல் வன்கொடுமையை தடுக்க தவறிய பாஜக அரசு பதவி விலக வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி செல்போனில் டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு