முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கைப்பந்து போட்டி முதல் இரண்டு இடங்களை பிடித்த செங்கல்பட்டு அணிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பரிசுகளை வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட அளலவிலான கைப்பந்து போட்டிகள் கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த போட்டியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த 14 அணிகள் பங்குபெற்றன. இதன் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராம்மூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரத்திஷ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதனை தொடர்ந்து, இந்த போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மேடவாக்கம், செங்கல்பட்டு அணி வீரர்களுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் கோப்பையும், மற்றும் 3 இடம் பிடித்த படப்பை பிரதர்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் கோப்பையும், 4 ம் இடம்பிடித்த முடிச்சூர் ஜானி பிரதர்ஸ் அணிக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டன. மேலும், இந்த போட்டியில் கலந்துக்கொண்ட அணிகள் அனைத்திற்கும் ஆறுதல் ஊக்கத்தொகையாக தலா ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டன. இந்த பரிசு மற்றம் கோப்பைகளை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். விழாவில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், துணை தலைவர் அன்புச்செல்வம் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது