வழக்கறிஞர்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்: நீதிமன்றங்களில் இ-பைலிங் முறைைய கண்டித்து திருவொற்றியூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சங்க தலைவர் தொண்டன் சுப்பிரமணி கூறுகையில், ‘நவீன காலத்திற்கு ஏற்ப அனைவரும் மாற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அனைத்து வழக்கறிஞர்களிடமும் கணினி வசதி இல்லை. அதனால் இ-பைலிங் செய்யலாம், நேரடியாகவும் மனு தாக்கல் செய்யலாம் என்ற ஒரு நிலை இருக்க வேண்டும். திடீரென ஒரு வழக்கறிஞர் போக்குவரத்து நெருக்கடி அல்லது அவசர சூழலில் வராதபோது மற்றொரு வழக்கறிஞர் நேரடியாக கோர்ட்டில் வாய்தா கேட்கும் நிலை இருக்கிறது. ஆனால் இ-பைலிங் என்றால் உடனே கம்ப்யூட்டர் வசதி வேண்டும். நீதிமன்றங்களில் அந்த வசதி தற்போது இல்லை. படிப்படியாக அதைகொண்டு வரவேண்டும்,’ என்றார்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு