சென்னையில் போலீசார் பயன்படுத்திய 59 காவல் வாகனங்கள் பெயின்டிங் மற்றும் சிறிய பழுதுகள் சரிபார்ப்பு: மோட்டார் வாகன சிறப்பு குழு பணிகளால் பல லட்சம் ரூபாய் செலவினம் தவிர்ப்பு

சென்னை: சென்னை போலீசார் பயன்படுத்திய 59 காவல் வாகனங்கள் பெயின்டிங் மற்றும் சிறிய பழுதுகள் சரிபார்க்கப்பட்டது. மேலும் மோட்டார் வாகன சிறப்பு குழு மூலம் இப்பணிகளை செய்ததால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் செலவினம் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை காவலில் கனரக, இலகுரக மற்றும் இரு சக்கர வாகனங்கள் என 3,327 அரசு காவல் வாகனங்கள் பல்வேறு காவல் பணிகளுக்காக பயன்படுத்தபட்டு வருகின்றது. இத்தகைய காவல் வாகனங்கள் தொடர் காவல் பணி காரணமாகவும், திறந்த வெளியில் பயன்பாட்டில் இருப்பதாலும், ஆண்டுகள் பல ஆனதாலும் அநேக வாகனங்களின் வெளித்தோற்றம் பொலிவிழந்து காணப்பட்டது

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இது போன்ற பொலிவிழந்து காணப்படும் காவல் வாகனங்களை கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன் அறிவுரையின்பேரில், மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர் தலைமையில், மோட்டார் வாகனப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார்அடங்கிய குழு அமைக்கப்பட்டு, இதுபோன்று வெளித்தோற்றம் பொலிவிழந்து காணப்படும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டது. இவற்றில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் காவல் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு, 100க்கும் வாகனங்கள் மேற்பட்ட இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் இந்நிலையில் உள்ளது கண்டறியப்பட்டது.

தனியார் நிறுவனங்கள் மூலமாக இவற்றில் உள்ள சிறு பழுதுகளை நீக்கவும், பட்டி பார்த்து பெயின்டிங் செய்யவும், நீண்ட காலமும் மிகுந்த பொருட் செலவும் ஏற்படும் என்பதால், வெளித்தோற்றத்தில் பொலிவிழந்த ரோந்து வாகனங்கள், மிக முக்கிய பிரமுகர் வழி பாதுகாப்பு வாகனங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் கைதிகளை கொண்டு செல்லும் வாகனங்கள் என 59 இலகுரக மற்றும் கனரக வாகனங்கள், மோட்டார் வாகன சிறப்பு குழு மூலம் போர்கால அடிப்படையில் புதுப்பிக்கப்ட்டு, அவற்றில் இருந்த சிறிய பழுதுகளும் நீக்கப்பட்டது. மேலும் காவலர்கள் கொண்ட மோட்டார் வாகன சிறப்பு குழு மூலம் இப்பணிகளை செய்ததால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் செலவினம் தவிர்க்கப்பட்டதுடன், கால விரயம் தவிர்க்கப்பட்டு, மிக குறுகிய காலத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டு, காவல் வாகனங்கள் புதிய பொலிவுடன் திகழ்கிறது.

Related posts

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்: சாத்தூரில் பரபரப்பு

சிவன் கோயிலில் பிரதோஷ விழா சிறப்பு வழிபாடு