மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம்:இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டன் சிவகுமாரை, கீழே இறக்கி அவமானப்படுத்தியதை கண்டித்து, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பென்னாகரம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு, நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கரூரான் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், வட்ட தலைவர் சக்திவேல், வட்ட பொருளாளர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்