மரத்தில் இருந்து விழுந்து புதுமாப்பிள்ளை பலி

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, நாகரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்(26) உள்ளிட்டோர் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அருண்குமார் எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அருண்குமார் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பிரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருண்குமார் தந்தை மணி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த அருண்குமாருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடதக்கது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்