தாம்பரம் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் கோட்டத்திற்கு உட்பட்ட மேற்கு தாம்பரம், முல்லை நகரில் உள்ள புதுதாங்கல் துணை மின்நிலைய வளாகத்தில் நாளை காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் மின்சார்ந்த பிரச்னைகள் குறித்து கருத்துகளை தெரிவித்து நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்