அரசு பள்ளி ஆண்டு விழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பெருநகர் ஊராட்சிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், வட்டார கல்வி அலுவலர் கலாவதி தலைமை தாங்கினார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் செந்தில்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தில்லைக்கரசி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மங்களகௌரி வடிவேலு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளியில் நடந்த விளையாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம் என பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வியாளர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு