நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு

ஆலந்தூர்: நங்கநல்லூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆலந்தூர் உதவி தேர்தல் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூரில் உள்ள நேரு அரசினர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியை ஆலந்தூர் உதவி தேர்தல் அதிகாரி சீனிவாசன் நேற்று நேரில் பார்வையிட்டார்.

அங்கு தேர்தல் சம்பந்தமாக தடுப்பு அமைப்பது, இருக்கை, மேஜைகள் மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது மண்டல செயற்பொறியாளர் பாண்டியன், வருவாய் அலுவலர் திருப்பால், ஆய்வாளர் இருதயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி