டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண, ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு; ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: நிலப் பிரச்னை தொடர்பாக ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல மருத்துவர் சுப்பையா, 2013 செப்டம்பரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி, அவரின் மகன்கள் வழக்கறிஞர் பாசில், இன்ஜினியர் போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், இன்ஜினியர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும், பொன்னுசாமியின் மனைவி மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து, 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்ல் மேல் முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு