காங்கிரஸ் கட்சி சார்பில் தபால் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம்

 

ஈரோடு, ஏப். 22: ஈரோட்டில் தபால் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூரம்பட்டியில் உள்ள தபால் நிலையத்துக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை எஸ்.கே.சி. ரோட்டில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் திரண்டனர்.

பின்னர், துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா முன்னிலையில், மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கவுன்சிலருமானஈ.பி.ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ராஜா, சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஜாபர் அலி,மாநில ஒருங்கிணைப்பாளர் அகமது, மாவட்ட தலைவர் மாப்பிள்ளை மீரான், மண்டலத் தலைவர்கள் விஜயபாஸ்கர்,ஜாபர் சாதிக் அல்டிமேட் தினேஷ், சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பாட்ஷா உள்ளிட்டோர் அங்கிருந்து ஊர்வலமாக சூரம்பட்டி நால்ரோட்டில், கையில் பூட்டுடன் கிராமடை தபால் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது, சூரம்பட்டி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, அனைவரும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு