சமூக நீதியை நிலைநாட்டிட சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்: சமூக நீதி சத்திரியர் பேரவை வலியுறுத்தல்

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சமூக நீதி சத்திரியர் பேரவை வலியுறுத்தியுள்ளது.சமூக நீதி சத்திரியர் பேரவையின் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட தொகுதி நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் வன்னியர் பொது சொத்து நல வாரிய தலைவர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜெயராமன், திரைப்பட இயக்குனர் மோகன் ஆகியோருக்கு பாராட்டு விழா மஞ்சள் படை சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. விழாவிற்கு சமூக நீதி சத்திரியர் பேரவையின் இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.குமார் தலைமை வகித்தார். துணை தலைவர் முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு வரவேற்றார். சமூக நீதி சத்திரியர் பேரவை தலைவர் பொன்குமார், முன்னாள் எம்பி எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், தொழிலதிபர் வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் பாராட்டுரை வழங்கினர்.

இறுதியாக ஜெயராமன், மோகன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். கூட்டத்தில் வன்னியர் பொது சொத்து நல வாரியத்திற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜெயராமனை தலைவராகவும் பிற உறுப்பினர்களையும் நியமனம் செய்து வன்னியப் பொதுச் சொத்து நல வாரியம் செயல்பட வழி வகுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொண்டு சமூக நீதியை நிலைநாட்டிட ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்னாள் அரசியல் நோக்கத்திற்காகஅவசர அவசரமாக வன்னியர்களுக்கு 10.5% சட்டமாக்கப்பட்டது. அது தற்போது நீதிமன்றத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிய சட்ட ஆவணங்கள் அடிப்படையில் 10.5 சதவீதம் நீதிமன்றத்தின் மூலம் பெற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும். ராஜேந்திர சோழனை வன்னியர் பொது அடையாளம் ஆக்குவது என்ற சமூக நீதி சத்திரியர் பேரவையின் இலக்கை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்