பைக் மீது லாரி மோதி மனைவி பலி கணவர் காயம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (40). இவரது மனைவி தெரசா (37). இவர்கள் நேற்று மம்பேடு அருகே பைக்கில் சென்றபோது, ஜல்லி கற்கள் ஏற்றிக்கொண்டு பின்னால் அதிவேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரில், தெரசாவின் மீது லாரியில் 2 சக்கரம் ஏறி இறங்கியது. அலெக்சாண்டர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இதனைபார்த்த அக்கம் பக்கத்தினர், பலத்த காயமடைந்த தெரசாவை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், தெரசா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்