விலை உயர்ந்த பைக்கில் சென்ற வாலிபர் பலி

அம்பத்தூர்: வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (23). பட்டதாரியான இவர் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபல தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இந்நிலையில் போரூரில் உள்ள தனது நண்பரைப் பார்க்க நேற்று காலை புழல் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தனது விலை உயர்ந்த பைக்கில் ஜான் பிரிட்டோ சென்று கொண்டிருந்தார். அம்பத்தூர் எஸ்டேட் பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஜான் பிரிட்டோவின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், கை, கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜான் பிரிட்டோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

லால்குடி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆதார் பதிவு

திருச்சி அருகே விபத்து கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதி 8 பேர் படுகாயம்

காயங்களுடன் பெண் மீட்பு