பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெறாத பயனாளிகளுக்கு அழைப்பு

 

மயிலாடுதுறை, ஜூலை28: கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடுதல் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளின் வயது 18-ஐ கடந்தும் முதிர்வுத்தொகை வழங்கப்படாமல் உள்ள பெண் குழந்தைகளின் விபரங்களை தொடர்ந்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடமிருந்து பெற்று அவர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகளை கண்டறிய முகாம் மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை நடைபெறும். வருகின்ற (ஆகஸ்ட் மாதம் 8.8.2023 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகள் பயன்பெற கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்