பழவேற்காட்டில் மீன்பிடிக்க தடை

சென்னை: பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இன்று பிற்பகல், 2.19 மணிக்கு பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்டவுண் நேற்று பிற்பகல் 12.14 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி, இன்று பழவேற்காடு பகுதி மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், பொன்னேரி மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

Related posts

மாவட்ட தீ தடுப்பு, தொழிற்சாலைகள் : பாதுகாப்பு குழு அவசர ஆலோசனை

மக்கள் போராட்டம் எதிரொலி: சாத்தான்குளத்தில் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை

அனைத்து பேருந்துகளும் புதுக்கோட்டைக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்