ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? விவசாயிகள் கோரிக்கை

 

பழநி, ஏப்.25: ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சி உள்ளது. இங்கு கொய்யா மற்றும் மா போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன. ஆயக்குடியில் விளைவிக்கப்படும் கொய்யா தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆயக்குடியில் நாள்தோறும் கொய்யா சந்தை நடைபெறும். அங்கு வரும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஏல முறையில் கொய்யா வகைகளை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். இத்தகைய பிரசித்தி பெற்ற கொய்யாவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியின் போது, பழநி திமுக எம்எல்ஏ ஐபி செந்தில்குமாரும் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க கூட்டம்

மண்ணச்சநல்லூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறு பைக் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது