அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்.. ஒரே நாளில் 200 மாணவர்களை கைது!!

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் மாணவர்கள் கைது செய்யும் நடவடிக்கைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர். காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்தும், போரை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசை வலியுறுத்தியும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களில் போராட்டம் நடத்தி வந்த 200 மாணவர்களை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்து இழுத்து சென்றனர். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Related posts

ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!

ஒரே ஒரு வாக்காளருக்காக, 10 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தனி வாக்குச்சாவடி அமைப்பு!!

பாலஸ்தீன மக்களை துரத்தும் துயரம் : ரபா நகரில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறும் அவலம்!!