அளக்கரை – அரவேனு சாலையோரம் பார்த்தீனியம் களை தாவரம் ஆக்கிரமிப்பு

 

ஊட்டி, மே 18: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வண்டிசோலை பகுதியில் இருந்து பெள்ளட்டிமட்டம், அளக்கரை வழியாக அரவேனு பகுதிக்கு 11 கிமீ தூர சாலை உள்ளது. இவ்வழியாக சென்றால் கோத்தகிரி பகுதிக்கு செல்லாமல் அரவேனு, குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இதன் மூலம் சுமார் 3 கிமீ தூரம் மிச்சமாகும். இதுதவிர இச்சாலையில் தேயிலை தோட்டங்கள் அதிகளவு உள்ளன. இதுதவிர வனப்பகுதிகளும் உள்ளன. இந்நிலையில் இச்சாலையில் அளக்கரை முதல் அரவேனு வரை சாலையோரங்களிலும், தேயிலை தோட்டங்களிலும் பார்த்தீனியம் எனப்படும் களை செடி அதிகளவு காணப்படுகிறது. இதனால் கால்நடைகள் மற்றும் காட்டுமாடு, மான் போன்ற வன விலங்குகளுக்கு ேபாதிய உணவின்றி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. பார்த்தீனிய செடிகள் நச்சுத்தன்மை வாய்ந்ததால் அவற்றை உண்ணும் வனவிலங்குகள் உயிரிழக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே இவற்றை அகற்ற சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து, கலப்படமில்லாத தேயிலை தூளினை வாழ்க்கை முறையில் பயன்படுத்தி கொண்டு, உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். மேலும் தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Related posts

இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி

கல்லக்குடியில் ஆம்புலன்ஸ் மோதி முன்னாள் விஏஓ பலி

திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது