ஆக்கூர் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்

 

செம்பனார்கோயில், ஆக.28: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் ஆக்கூர் மின்பாதையில் நாளை (29ம்தேதி) பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மேற்கண்ட மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் மடப்புரம், உமையாள்புரம், ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, அப்புராசபுத்தூர், காளகஸ்திநாதபுரம், கடிச்சம்பாடி, திருச்சம்பள்ளி, முடிகண்டநல்லூர் ஆகிய இடங்களில் நாளை (29ம்தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேலும் மின் நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. இந்த தகவலை செம்பனார்கோயில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் தெரிவித்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்