76 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் எதிரொலி தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு; 15ம் தேதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாட்டின் 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் எதிரொலியாக தீவிரவாத அச்சுறுத்தல்களை கட்டுப்படும் வகையில் தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  நாட்டின் 76வது சுதந்திர தின விழா வரும் திங்கள் கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் தலைமை செயலகமான கோட்டை கொத்தளத்தில் முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்பு மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய கொடியை ஏற்றுகிறார். இதற்கான பாதுகாப்பு ஒத்திகையும் நேற்று தலைமை செயலகம் முன்பு நடந்தது. அதேநேரம், சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாக ஒன்றிய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதை உறுதி செய்யும் வகையில் ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக வீரர் உட்பட 3 ராணுவ வீராகள் வீரமரணமடைந்துள்ளனர். இதனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு அவசர சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அதை தொடர்ந்து தமிழகத்தில் கடலோர பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழும் சார்பில் அதி நவீன படகுகள் மூலம் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர கடலோர பாதுகாப்பு படையினரின் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களான சென்னை கோயம்பேடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கோவை என முக்கிய பேருந்து நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், மதுரை, நெல்லை, கோவை என முக்கிய ரயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ெவளிமாநில, நாடுகளை சேர்ந்தவர்களின் முகவரி மற்றும் புகைப்படத்துடன் தகவல் அளிக்க லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதி மற்றும் நட்சத்திர ஓட்டல் மேலாளர்களுக்கு காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, 1.20 லட்சம் போலீசாரை ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார். சென்னையை பொருத்தவரை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 4 கூடுதல் கமிஷனர்கள் மேற்பார்வையில் 7 இணை கமிஷனர்கள், 22 துணை கமிஷனர்கள் தலைமையில் 22 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்