5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வெற்றி முகம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து அறிக்கை

சென்னை: உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகள், உத்தரகாண்டின் 70 தொகுதிகள், பஞ்சாப்பில் 117 தொகுதிகள், மணிப்பூரில் 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகளுக்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் நான்கு மாநிலங்களில் ஆட்சியமைக்கவுள்ள பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ‘அன்புள்ள பிரதமர், உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று மக்களின் இதயங்களை வென்றதற்கு உங்களை வாழ்த்துகிறேன். உங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு தீர்ப்பு வருகிறது. இது வளர்ச்சிக்கான ஆணையாகும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.’ என தெரிவித்திருந்தார். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்