42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாகர்கோவில்: 42 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தியை வழியில் இளைஞர்கள், பெண்கள் சந்தித்து அவருடன் நடைபோட்டனர். அப்போது ‘ஐ ஏம் வாக்கிங் பார் ஜாப்’ என்ற டி சர்ட்களை அணிந்து இளைஞர்கள் பலர் இந்த பாத யாத்திரையில் கலந்துகொண்டனர். அவர்கள் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். இந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, ‘நமது இளைஞர்களில் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அவர்களுக்காக நாங்கள் நடக்கிறோம். வேலைக்காக நடக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …

Related posts

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்

புராதன சின்னங்களை சுற்றி பார்க்க மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதி

மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக ஆதம்பாக்கத்தில் உயர்மட்ட பாதை பணி தீவிரம்: 2026க்குள் முடிக்க திட்டம்