35 மையங்களில் 105 நபர்கள் ஆப்சென்ட் குன்னம் அருகே அந்தூர் கிராமத்தில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்ற மக்கள் கோரிக்கை

குன்னம்,மார்ச5: குன்னம் அருகேயுள்ள அந்தூர் கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல் நிலை நீர்தேக்க தொட்டி அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள அந்தூர் கிராமத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக கடந்த 20 ஆண்டுக்கு முன்னர் ஒரு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் தொட்டியில் ஓட்டை விழுந்து அதன் வழியாக தண்ணீர் வழிந்து தொட்டி முழுவதும் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதனால் தொட்டியை தாங்கி நிற்கும் காண்கிரிட் தூண்கள் உடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி சேதமடைந்துள்ளது. குடிநீர் ஓட்டைகள் வழியாக வழிவதால் அந்த தொட்டியை தாங்கி நிற்கும் தூண்கள் முழுவதும் ஆங்காங்கே இடிந்து எந்த நேரத்திலும் குடி நீர் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த நேரத்திலும் அந்த தொட்டி இடிந்து விழுந்து விடுமே என்ற அச்சத்துடன் இருக்கின்றனர்.

மேலும் இந்த குடிநீர் தொட்டி அருகில் ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதனால் அங்கு உள்ளவர்களும் அச்சத்துடனே தான் உள்ளனர். அத்துறை அதிகாரிகள் அந்த நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கோவில்பட்டியில் 113வது நினைவுதினம் வாஞ்சிநாதன் படத்திற்கு மரியாதை

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் நெடுஞ்சாலையில் வைத்துள்ள பேரிகார்டால் விபத்து அபாயம்

தூத்துக்குடி சண்முகபுரம் சவுண்ட் சர்வீஸ் கடையில் பயங்கர தீ விபத்து