31 பவுன் நகை கேட்டு வாலிபர் கடத்தல்

மதுரை, நவ. 9: இரவல் வாங்கிவிட்டு திரும்ப தராத 31 பவுன் நகைகளை கேட்டு வாலிபரை காரில் கடத்திய கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, வண்டியூர், தேவர் நகரைச் சேர்ந்தவர் கவுதம்(30). இவர், சில ஆண்டுகளுக்கு முன் அவருக்கு தெரிந்த தபால் தந்தி நகரைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரிடம் இருந்து 31 சவரன் நகைகளை இரவல் வாங்கி விற்றுள்ளார். மருதுபாண்டி பலமுறை கேட்டும் கவுதம் நகைகளை கொடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நான்கு பேர் கொண்ட கும்பல் வண்டியூர் அருகே கவுதமை காரில் சத்திரப்பட்டிக்கு கடத்திச்சென்றனர். அங்கு வந்த மருதுபாண்டி, பவுன்சர் முருகன் ஆகியோர் காரில் ஏறிக்கொண்டனர். பின் அனைவரும் சேர்ந்து கவுதமை தாக்கி வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றர். இதையடுத்து கவுதமை தல்லாகுளத்தில் இறக்கிவிட்ட அவர்கள், நடந்ததை போலீசில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிச் சென்றனர். இது குறித்து கவுதம் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்