300 கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு சிறுதானியங்களின் சிறப்பம்சங்களை பொதுமக்களிடம் கொண்டு சேருங்கள்

 

காரைக்கால், ஜூலை 27: சிறுதானியங்களின் சிறப்பம்சங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வேளாண் மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரியில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு காரைக்கால் ரோட்டரி சங்க தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். முன்னதாக பஜன்கோவின் ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜார்ஜ் பேரடைஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் புஷ்பராஜ் உணவில் சிறுதானியத்தின் முக்கியத்துவம் மற்றும் உணவின் நெறிமுறைகள் குறித்து பேசினார்.

அடுத்ததாக ரோட்டரி சங்கத் தலைவர் அருள்ராஜ் பேசுகையில், வேளாண் கல்லூரி மாணவர்கள் சிறுதானியத்தின் சிறப்பம்சங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் மாணவர்கள் தங்கள் வாழ்வில் நன்கு உழைத்து, பிறர் முன்னேற விட்டுக்கொடுத்து பொது நலத்துடன் வாழ வேண்டும் என்றும் ஊக்குவித்தார். சிறுதானியத்தின் சிறப்பங்களை வெளிப்படுத்தும் விதமாக- சிறுதானிய உணவு தயாரித்தல், சிறுதானிய மலர்கொத்து தயாரித்தல் மற்றும் சிறுதாணியத்தை கொண்டு ரங்கோலி ஆகிய போட்டிகள் மாணவர்களிடையே நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டி ரோட்டரி சங்கம் மூலமாக பரிசளிக்கப்பட்டது. மேலும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. சிறுதானியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்