21 செம்மறி ஆடுகள் இறப்பு

தொண்டி : தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் கிடையில் அடைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் பலி.கடலாடி அருகே டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் தொண்டி அருகே முள்ளிமுனை பகுதியில் ஆடுகளை மேய்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு ஓலையால் செய்யப்பட்ட மூன்று கிடையில் ஆடுகளை அடைத்துள்ளார். நேற்று காலை கிடைகளை திறந்த பார்த்த போது ஒரு கிடையில் அடைத்திருந்த 21 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தது.இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் இப்பகுதிக்கு ஆடு மேய்க்க வருவது வழக்கம் நேற்று இரவு ஒரு கிடையில் அடைத்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்து ஆடுகளும் இறந்தது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கண்ணீருடன் கூறினார்….

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி